SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக தலைவர் கருணாநிதி மறைவு : பெண்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி

8/9/2018 2:30:55 AM

சேலம், ஆக.9: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலத்தில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவையொட்டி, சேலம் டவுன், சின்னக்கடை வீதி, லீ பஜார், செவ்வாய்பேட்டை, பால்மார்க்கெட், வ.உ.சி. பூ மார்க்கெட், ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட் உள்பட மாநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கப்படவில்லை. சேலத்தின் மைய பகுதியான பெரியார் மேம்பாலம் பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் காணப்படும். நேற்று பெரியார் மேம்பாலம், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ஓமலூர் மெயின் ரோடு, 4 ரோடு, 5 ரோடு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு, அரசு, தனியார் அலுவலகங்களுக்கு அரசு பொது விடுமுறை விடப்பட்டது. சேலம் மாவட்டம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நேற்றுமுன்தினம் மாலை மூடப்பட்டது. சேலம் மாநகர பகுதியில் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை தலைமையில் 1000 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூரில் இருந்து சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற 27 போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் அதிகாரிகளுடன் ரோந்து சென்றனர். மாநகர் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில், எஸ்பி ஜோர்ஜி ஜோர்ஜ் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், ஏற்காடு என அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பஸ் ஸ்டாண்டுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் பால் மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கருணாநிதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகள் கருணாநிதியில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு அமைப்பினர் கருணாநிதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். காடையாம்பட்டி:  காடையாம்பட்டி அருகே பொட்டியபுரம் கிராமம் கொண்டையனூர் பகுதியில், கிராம மக்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செய்யும் வகையில், பந்தல் அமைத்து, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாலையில் மேள தாளங்களுடன் அவரது உருவ பொம்மைக்கு இறுதி மரியாதை செய்து ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதில் முருகன், பச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல்,  காடையாம்பட்டி அருகே உள்ள தாராபுரம் ஊராட்சியில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஊராட்சி செயலாளர் மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்