SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணாநிதி மறைவு: திருச்சியில் கடைகள் அடைப்பு, அமைதி ஊர்வலம்

8/9/2018 2:25:33 AM

திருச்சி, ஆக.9: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையொட்டி, நேற்று திருச்சியில் திமுக, அனைத்து கட்சியினர், கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை முதல் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் உள்ள திக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.அரசு  பணிமனை முன்பு, அனைத்து கட்சி கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஆட்டோக்களிலும், கார்களிலும் கருப்புக் கொடி கட்டியிருந்தனர். மாநகர் முழுவதும் கடைகள் முன்பாகவும், வீதிகளிலும் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.மாநகரின் முக்கிய இடங்களான கருமண்டபம், மிளகுபாறை, கே.கே.நகர், தில்லை நகர், உறையூர், பாலக்கரை, காந்திமார்க்கெட், ரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கருணாநிதியின் படத்திற்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ரங்கம் ராஜகோபுரம் அருகே திமுக, தி.க, காங்கிரஸ், ரஜினி மன்றத்தினர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவரது படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ரங்கம் சாத்தார வீதியில் பூ வியாபாரிகள் கருணாநிதி படத்திற்கு மலர ஞ்சலி செலுத்தினர். காந்திமார்க்கெட் வியாபாரிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஏர்போர்ட், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், சத்திரம் பஸ்நிலையம், ரங்கம், காந்திமார்க்கெட், பொன்மலை, பெரிய கடைவீதி, என்.எஸ்.பி, தெப்பக்குளம், இபிரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்சியின் வர்த்தக மையமான பெரிய கடைவீதி, என்.எஸ்.பி சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் மாநகரில் உள்ள அனைத்து கடை களும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. ரங்கம், ஜங்சன், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகர் முழுவதும் உள்ள ஓட்டல் கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.மாநகரில் அனைத்து திரையரங்குகளிலும் நேற்று முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. அனைத்து பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டது. பேருந்துகள், ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அந்த பகுதிகளில் வஜ்ரா வாகனமும், தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் தாமாக முன்வந்து கருணாநிதி யின் மறைவுக்குத் துக்கம் அனுசரித்தனர். மாவட்டத்தில் மாநகர், புறநகர் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத அமைதி நிலவியது.திருவெறும்பூரில் அனைத்து கட்சி சார்பில் நேற்று காலை இரங்கல் ஊர்வலம் நடந்தது. காட்டூர் திமுக செயலாளர் நீலமேகம் தலைமையில் முருகானந்தம் (அதிமுக), பால்சாமி (மதிமுக), செல்வராஜ்(இந்திய கம்யூ.), பாண்டியன் (சிபிஎம்), இந்திரன் (பாஜ), முத்துக்குமார் (அமமுக), ஆறுமுகசாமி (தேமுதிக) உள்பட 300க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். திமுக இளைஞரணி சார்பில் திருவெறும்பூரில் இருந்து காட்டூரை வரை பைக்கில் அமைதி பேரணி நடத்தினர். குண்டூரிலும் இரங்கல் ஊர்வலம் நடந்தது. காட்டூர் பகுதியில் திமுக, கூட்டணி கட்சியினர் அமைதி ஊர்வலமாக சென்றனர். காட்டூர் அந்தோணியார் கோயில் பங்குதந்தைகள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர்.பொன்மலை ஆர்மரிகேட்டில் எல்இடி திரையில் டிவியில் ஒளிபரப்பாகிய கலைஞரின் இறுதியஞ்சலி ஒளிபரப்பப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி ஓஎப்டி, ஹெச்ஏபிபி நிறுவனங்களில் நேற்று விடுமுறை விடப்பட்டது. மணப்பாறை: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மருங்காபுரி மற்றும் மணப்பாறை நகர, ஒன்றிய பகுதிகளில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. இப்பகுதிகளில் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அடைத்து துக்கம் அனுசரித்தனர். மணப்பாறை காந்தி சிலை அருகே தி.மு.க, உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் துவங்கிய அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியே சென்று பொத்தமேட்டுப்பட்டியை சென்றடைந்தது.

இதில், நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். பின்பு அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் பேசினர். தி.மு.க.வினர் பலரும் துக்கம் அனுசரிக்கும் விதமாக மொட்டையடித்து கொண்டனர். பெரிய பட்டி அருகேயுள்ள சங்கிலியாண்டபுரத்திலிருந்து வடக்கு சேர்பட்டி, இடைய பட்டி வழியாக 5 கி.மீ தூரம் தி.மு.கவினர் கருணாநிதி உருவ பொம்மையுடன் இறுதி ஊர்வலம் நடத்தி மரவனூர் அருகேயுள்ள மாமுண்டி ஆற்றங்கரையில் இறுதி சடங்குகள் செய்தனர்.இதுபோல  மருங்காபுரி வடக்கு, தெற்கு ஒன்றியம், துவரங்குறிச்சியில் பேரூர் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.  
லால்குடி: லால்குடி தாலுகா புள்ளம்பாடி, கல்லக்குடி  பகுதியில் அனைத்து கட்சி சார்பில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி மறைவையொட்டி அமைதி  ஊர்வலம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தார். இதில் திமுக, காங்கிரஸ், தமாகா, அதிமுக, திக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். கல்லக்குடியில் நகர திமுக செயலாளர் பால்துரை தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
தா.பேட்டை:  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முசிறி, தொட்டியம், தா.பேட்டை உள்பட பகுதியில் அமைதி பேரணி நடைபெற்றது.

முசிறி கைகாட்டியில் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் தலைமையிலும்,  தா.பேட்டை கடைவீதியில் திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமையிலும் அமைதி பேரணி நடைபெற்றது. தொட்டியத்தில் கடையடைப்பு மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வாளவந்தி, திருத்தலையூர் உள்பட பல கிராமங்களில் தொண்டர்கள் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மயானத்திற்கு சென்று மொட்டைஅடித்து அஞ்சலி செலுத்தினர்.

துறையூர்: திமுக தலைவர் கருணாநிதி மறைவை யொட்டி துறையூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது. கருணாநிதியின் படம் அலங்கரிக்கப்பட்டு துறையூர் பாலக்கரையில் இருந்து புறப்பட்டு சிலோன்ஆபீஸ், ஆஸ்பத்திரிரோடு, திருச்சி ரோடு வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது.பேரணியில் மாவட்ட திமுக பொருளாளர் தர்மன் ராசேந்திரன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துறையூரில் நேற்று பஸ்கள் இயங்காததால் லோடு ஆட்டோவில் பொது மக்கள் சென்றனர்.திமுக தொண்டர் கார் மோதி பலி: வளநாடு அருகே கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த திமுக தொண்டர் கார் மோதி பலியானார்.மணப்பாறை தாலுகா வளநாடு அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் வடிவேல் (35). திமுக தொண்டரான இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி நேற்று வளநாடு கைகாட்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வளநாடு கைகாட்டியில் சாலையை கடக்கும் போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் வடிவேல் உயிரிழந்தார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்