SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமங்கலத்தில் மவுன ஊர்வலம்

8/9/2018 1:52:23 AM

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி திருமங்கலத்தில் சர்வகட்சியினர் கலந்து கொண்ட மவுனஊர்வலம் நடந்தது. தேவர்திடலில் நடைபெற்ற கலைஞர் புகழாஞ்சலி கூட்டத்திற்கு திமுக நகர பொறுப்பாளர் முருகன் தலைமை வகித்தார். திமுக முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் முன்னிலை வகித்தார். அதிமுக நகரசெயலாளர் விஜயன், காங்கிரஸ் தெற்குமாவட்ட தலைவர் ஜெயராமன், மதிமுக நகரசெயலாளர் அனிதாபால்ராஜ், தேமுதிக நகரசெயலாளர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் முத்துராமன், அமமுக சார்பில் ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்புக்காளை, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அஜ்மல்கான், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சி சார்பில் முகமது, விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெருமாள் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர். ஏராளமான திமுக தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். வாகைகுளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, கப்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவினர் ஏராளமானோர் மொட்டை போட்டுகொண்டனர்.

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மவுன ஊர்வலம், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக கேட்டுகடையில் திமுக தொண்டர்கள் பலர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் அய்யூர்தயாளன், தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கருணாநிதியின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் வட்டார தலைவர் சுப்பராயலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அழகர்கோவில் கோட்டைவாசல் முன்பாக திமுக சார்பாக கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர்கள் முத்துபொருள், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவினை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை வாடிப்பட்டி பகுதி முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன, பஸ், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை. இதனால் வாடிப்பட்டி பஸ்நிலையம் மற்றும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

நேற்று மாலை வாடிப்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்து அனைத்து கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் தலைமை வகித்தார். காங்கிரஸ் குருசாமி, முருகானந்தம், செல்வக்குமார்,திராவிடர் கழகம் தனபாலன், தமாகா கராத்தே சிவா,சரவணன், விசிக கணபதி, தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூர்த்தி, திமுக நிர்வாகிகள் ஜி.பி.பிரபு, ஆர்.கே.செல்வராஜ்,கருப்பையா, சுந்தரபாண்டி, கொரியர் சிவா, கார்த்தி பங்கேற்றனர். கச்சைகட்டியில் ஊராட்சி செயலாளர் அயோத்திராமன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மொட்டையெடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். கச்சைகட்டி கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக கருணாநிதி புகைப்படத்துடன் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக வலம் வந்தனர்.திமுக நிர்வாகிகள் வக்கீல் ராஜாஜி, பதினெட்டு, செல்லப்பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர். பூச்சம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில் திமுக தொண்டர்கள் மொட்டையெடுத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vaanvali_makal111

  நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

 • delta_kadai111

  காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

 • prathmar_rajiv1

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

 • kerala_makkal111

  மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

 • 20-08-2018

  20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்