SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் அஞ்சலி

8/9/2018 1:51:59 AM

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜகஅலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். மாவட்டத் தலைவர் சசிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேரையூர்
பேரையூர் பேரூராட்சியில் நகரசெயலாளர் பாஸ்கரன் தலைமையிலும், டி.கல்லுப்பட்டியில் நகரசெயலாளர் முத்துகணேசன் தலைமையிலும், சேடபட்டியில் பெருங்காமநல்லூர் ஜெயச்சந்திரன் தலைமையிலும், எழுமலையில் பேரூர் நகரசெயலாளர் ஜெயராமன், துணைச்செயலாளர் கட்டாரிபாண்டி, தலைமையிலும், அத்திபட்டியில் கிளைசெயலாளர் சுப்பையா தலைமையிலும் திமுக தலைவர் கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். மாலை அப்பகுதியிலுள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று 200க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மொட்டையெடுத்து அஞ்சலி செலுத்தினர். எருமார்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் கருணாநிதியின் நினைவாக சுடுகாட்டில் மரக்கன்றுகளை நட்டனர்.

திருப்பரங்குன்றம்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பரங்குன்றத்தில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பஸ்நிலையத்தின் முன்பு துவங்கிய ஊர்வலம் பதினாறாம் கால் மண்டபத்தில் நிறைவடைந்தது. திமுக வட்ட செயலாளர் சேது பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இரங்கல் கூட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் முதல் நிலை ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன், அதிமுக முத்துகுமார், மதிமுக முருகேசன், அமமுக வீரமணி, தேமுதிக கணபதி, சிபிஎம் ராஜீ, ஏஐடியுசி தினகரன் மோகன், பாஜ வேல்முருகன், விசிக இன்குலாப், காங்கிரஸ் மகேந்திரன், தமாக சுந்தர்ராஜன் பேசினர். திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் ஊழியர் கலைஞர், பாலு ஆகியோர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.

உசிலம்பட்டி
உசிலம்பட்டி தேவர்சிலை அருகில் திமுக தலைவர் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர்மாலை அணிவித்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. நகரசெயலாளர் தங்கமலைப்பாண்டியன், ஒன்றியசெயலாளர் சுதந்திரம், தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, நகரசெயலாளர் பூமாராஜா, அமமுக மாவட்டசெயலாளர் மகேந்திரன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியினர், பாரதிய பார்வட்பிளாக் கட்சி நிறுவனர் முருகன்ஜீ, வர்த்தகசங்கம் ஜவஹர், 58 கிராமகால்வாய் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்செல்வன், சிவப்பிரகாசம், ரஜினிமக்கள் மன்றம் கார்த்திகைசாமி, காங்கிரஸ் சசிவர்ணத்தேவர், லோடுமேன்சங்கம், டாக்ஸிஓட்டுனர்கள்சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், பூக்கடை சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்