SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது விபத்து : மரத்தில் கார் மோதி திமுக பிரமுகர் பலி

8/9/2018 12:39:42 AM

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது செங்கல்பட்டு அருகே மரத்தில் கார் மோதி திமுக பிரமுகர் பரிதாபமாக பலியானார், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரசோளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (45). இவர், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணை அமைப்பாளராக இருந்து வந்தார். திமுக தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிந்து, அவருக்கு அஞ்சலி செலுத்த ெசன்னைக்கு நேற்று அதிகாலை காரில் புறப்பட்டார்.
டிரைவர் முருகன் என்பவரை காரை ஓட்டினார். மணிவண்ணனுடன் கட்சிகார்கர்கள் ஜோசப், தங்கபாண்டியன், செல்லதுரை, மாரிமுத்து, பெரியசாமி ஆகியோரும் காரில் வந்தனர்.

இவர்களுடைய கார் மதுராந்தகம் அருகே வந்தபோது, டிரைவர் முருகனிடம் மணிவண்ணன், ‘காரை நான்  ஓட்டுகிறேன்’ என்று கேட்டு வாங்கியுள்ளார். அவர்கள் செங்கல்பட்டு பைபாஸ் சாலை பழவேலி அருகே வந்தபோது திடீரென நிலைத்தடுமாறிய கார் சாலையின் சென்டர்மீடியனில் உள்ள மரத்தில் கார் மோதி நொறுங்கியது. இதில், தலையில் அடிபட்டு மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 6 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், மணிவண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காகவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்