SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர்

8/9/2018 12:38:37 AM

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதியும், மாநில தலைமைச் செயலகங்களில் கவர்னர்களும் தேசியக் கொடி ஏற்றுவதுதான் வழக்கமாக இருந்தது.  மக்கள் பிரதிநிதிகளான, மாநில முதல்வர்களுக்கும் தேசியக் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று கருணாநிதி போராடினார். அவரின் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்த்தது. கடந்த 1974ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் கொடியேற்றுவார்கள் என்றும், குடியரசு தின விழாவில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவார் என்றும் அறிவித்தார். மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதிதான்.


தேசமே திரும்பி பார்த்த வெற்றி
கடந்த 1971ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தேர்தல் களத்தைச் சந்தித்த திமுக, தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் பெற்றிராத வகையில் 184 தொகுதிகளில் வெற்றிப் பெற்று சரித்திர சாதனை நிகழ்த்தியது. தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னர் தான், மாநில சுயாட்சித் தீர்மானம், கச்சத்தீவை தாரை வார்ப்பதைத் தடுக்கும் தீர்மானம், பொதுவாழ்வில் இருப்போர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சட்டம் உள்ளிட்டவற்றை கருணாநிதி நிறைவேற்றினார்.

அவர்தான் கருணாநிதி;

கடந்த 1951ம் ஆண்டு, திமுகவின் முதல் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அறிஞர் அண்ணாவை பொதுச்செயலாளர் ஆக்க எல்லோரும் வழிமொழிந்து பேசிக்கொண்டிருந்தனர். இறுதியில் 27 வயது இளைஞர் ஒருவர் பேசினார்.
அந்த இளைஞர் பேசுகையில், ‘‘ வாழ்வு மூன்று எழுத்து; வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்று எழுத்து; பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்aது; அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து; காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து; களத்திலே பெரும் வெற்றி மூன்று எழுத்து; அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து; அந்த அண்ணாவை தலைமை ஏற்க வழிமொழிகிறேன்’’ என்றார்.
இவ்வாறு அவர் பேசியவுடன், மைதானமே கைதட்டலால் அதிர்ந்தது. அண்ணா மைக்கை பிடித்து பேச துவங்கிய பின்பும், அந்த கைதட்டல் ஓயவே இல்லை. யார் அந்த இளைஞர்? அவர்தான் கலைஞர் கருணாநிதி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்