பள்ளி மாணவன் கடத்திக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி 3 ஆண்டாக தலைமறைவு
7/13/2018 4:23:50 AM
சேலம்,ஜூலை 13: சேலத்தில் பள்ளி மாணவன் கடத்திக்கொலை செய்யப் பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்ப தால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் செவ்வாய் பேட்டை அய்யாசாமி செட்டி ரோட்டை சேர்ந்தவர் ஹரி நாராயணன். இவர் நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள ஒரு மைன்சில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் கஜேந்திரன்(15). 10ம்வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் அவரது கார் டிரைவர் சத்தியநாராயணன்(32) என்பவர், கஜேந்திரனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதாக கடந்த 2010ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம்தேதி யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றார். பின்னர் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், எருமப்பட்டி பகுதியில் கஜேந்திரனை கொன்று உடலை வீசிசென்றான்.
இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, வீராணம் அல்லிக்குட்டையை சேர்ந்த சத்தியநாராயணன், அவரது கூட்டாளியான பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்வழுதி(30) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சாட்சி விசாரணை முடிவடையும் நிலையில், சத்தியநாராயணன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காரிப்பட்டி போலீசாரை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண்கள் திடீர் தர்ணா
சேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஒப்பந்தம்
பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து புதிய கட்டிடம்
கைலாசநாதர் கோயில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படாததால் பக்தர்கள் ஏமாற்றம்
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 13 மையங்களில் வினாத்தாள் வைப்பு
மருத்துவ முகாம்