SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூஜை உபகரண பொருட்களை கோயில்களுக்கு வழங்க வேண்டும்

7/13/2018 4:23:28 AM

சேலம், ஜூலை 13: கோயில்களுக்கு  காணிக்கை யாக வரும் பூஜை உபகரண பொருட்கள்  விற்பனை செய்யாமல் வருமானம் இல்லாத கோயில்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் வாசு, அறநிலையத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பி யுள்ளார்.இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.  இந்த கோயில்களுக்கு பக்தர்கள் பல்வேறு வேண்டுதல், பிரார்த்தனைகளுக்காக  பூஜை மணி, தூபக்கால், தாம்பாளம், திருவிளக்கு, குடம், அலங்கார தீபம் போன்ற பல்வேறு பூஜை உபகரண பொருட்கள் காணிக்கையாக வருகின்றன.

சம்பந்தப்பட்ட கோயில்கள் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள உபகரண பொருட்களை கோயில் நிர்வாகம்  விற்பனை செய்கிறது. இந்த பூஜை உபகரண பொருட்களை இனிவரும் காலங்களில்  விற்பனை செய்யாமல், தமிழகத்தில் வருமானம் இல்லாத சிறிய கோயில்களுக்கு விலையின்றி வழங்க வேண்டும். பூஜை பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு செலவிடும் தொகை அறநிலையத்துறைக்கு நிதி சுமை குறையும். பூஜை உபகரண பொருள்களை செய்யாமல் சேமித்து வைக்க வேண்டும். கோயில்களுக்கு வரும் பூஜை உபகரண பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, காணிக்கை பொருள்கள் அனைத்திற்கும் உடன் ரசீது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்