SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்காணத்தில் நவீன உப்பு அரவை தொழிற்சாலை

7/13/2018 3:53:28 AM

மரக்காணம், ஜூலை 13: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்
பளங்கள் உள்ளது. இதில் இருந்து ஆண்டுதோறும் 4 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு புதுவை, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உப்பு உற்பத்தி செய்ய வெயில் அதிகளவில் தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் உப்பு உற்பத்தியும் அமோகமாக உள்ளது. இப்பகுதியில் உப்பு அரவை தொழிற்சாலைகள் இல்லாததால் கல் உப்பாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ உப்பு ரூ.1.30 முதல் ரூ.1.70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பவுடராக அரைத்து உப்பு உற்பத்தி செய்யப்படும் மரக்காணத்திலேயே ஒரு கிலோ உப்பு ரூ.12 முதல் ரூ.18 வரையில் விற்பனையாகிறது. தற்போது பொது மக்களும் அதிகளவில் பவுடர் உப்புக்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பவுடர் உப்புகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இங்கு நவீன உப்பு அரவை தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளை அரைத்து பவுடர் உப்புகளாக விற்பனை செய்யமுடியும். இதுபோல் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான உப்பு கிடைக்கும். இதன் மூலம் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் பயன்பெறுவர்.
எனவே, இப்பகுதியில் நவீன முறையிலான உப்பு அரவை தொழிற்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்