SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வாலிபருக்கு போதை ஊசி போட்ட வழக்கு மெடிக்கல் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

7/13/2018 2:43:37 AM

திருச்சி, ஜூலை 13: திருச்சியில் வாலிபருக்கு போதை ஊசி போட்ட வழக்கில் மெடிக்கல் கடை பெண் உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (20). இவரது பெற்றோர் இறந்து விட்டதால், அக்கா வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் சின்னமார்க்கெட் கடை மாடி மற்றும் அன்னதான சத்திரத்தில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது உறவினர்  குமார் என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில் குமாரின் நண்பர்கள் அருண், தர்மா ஆகிய இருவரும் மாடி அறையில் தங்கியிருந்தனர். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய இருவரும், போதை ஊசியும் அடிக்கடி உடலில் செலுத்தி வந்தனர்.

இதை அஜித்குமார் கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அருண், தர்மா இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரின் இடது கையில் போதை ஊசியை செலுத்தி உள்ளனர். இதனால் அஜித்குமார் வலியால் துடித்து நிலையில் ஒரு நாட்களில் ஊசி செலுத்தப்பட்ட பகுதி மரத்து போனதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, திருச்சி அடுத்த ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். மேலும் போதை மாத்திரை எங்கு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் நேற்று நண்பர்கள் அருண், தர்மா, போதை மாத்திரை விற்றதாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெடிக்கல் கடை ஊழியர் வெள்ளையன் (எ) சுரேஷ் பாபு, உரிமையாளர் வசந்தா (70) ஆகிய 4  பேரை கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்