SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோர்ட்டில் ஆஜராக மனைவியை அழைத்து வந்தவர் மீது கணவன் குடும்பத்தினர் தாக்குதல்

7/13/2018 2:42:24 AM

துறையூர், ஜூலை 13: துறையூர் நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து வழக்கில் ஆஜராவதற்காக மனைவியுடன் வந்தவருடன் தகராறு செய்து தள்ளிவிட்டதில் அவரது கால் முறிந்தது. நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருக்கும் நாமக்கல் எருமைப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமிக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. திருமணமான 3 மாதத்திலேயே கணவன், மனைவி பிரிந்துவிட்டனர்.இந்நிலையில் விவாகரத்து கேட்டு துறையூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து வாய்தாவுக்கும் ஆஜரான சத்தியசீலன் நேற்றுமுன்தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது முத்துலெட்சுமி, நீலமேகம் என்பவருடன் பைக்கில் கோர்ட்டுக்கு வந்து காத்திருந்தார். அப்போது சத்தியசீலன், நீலமேகத்திடம் சென்று தகராறு செய்தார்.

அப்போது சத்தியசீலனின் உறவினர்களும் சேர்ந்து தகராறு செய்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில் கீழே விழுந்த நீலமேகத்தின் கால் எலும்பு முறிந்தது. இந்த சத்தம் கேட்டு நீதிபதி மற்றும் போலீசார் வெளியே வந்தனர். பின்னர் காயமடைந்த நீலமேகத்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார்  சத்தியசீலன், உறவினர் பூபாலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சத்தியசீலனின் தாய் சரோஜா, தங்கை கவிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துறையூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்