SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலும் சாலை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்றார். வாழை மரங்களை வெட்டி அழித்து 3 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி

7/13/2018 2:42:19 AM

திருச்சி, ஜூலை 13: கல்லூரி நிர்வாகம் இனாமாக கொடுத்த நிலத்தில் பயிரிட்டுள்ள வாழை மரங்களை வெட்டி அழித்து 3 ஏக்கர் நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் மனு கொடுத்துள்ளார்.
திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் நிர்மலா. இவர் தனது சகோதரிகள் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று சென்று மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது தாய் ஜெயமேரி 1965ம் ஆண்டிலிருந்து ஒரு கல்லூரிக்கு சொந்தமான நிலத்தை கல்லூரி நிர்வாகத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த இடம் சிந்தாமணி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ளது. கல்லூரி நிர்வாகம் 3 ஏக்கர் நிலத்தை எனது தாயாருக்கு இனாமாக கொடுத்தது. மேலும் கல்லூரியின் நிர்வாக கவுன்சில் மூலம் உரிய தீர்மானத்தினை நிறைவேற்றி கொடுத்துள்ளது. எனது தாய் இறந்த பின்னர் அந்த நிலங்களை நான் பராமரித்து வருகிறேன். என் தாயாருக்கு 6 மகள்கள் உள்ளனர். எனவே இந்த இடத்தை வாரிசுபடி அனுபவித்து வருகிறோம். இந்நிலையில் கிராம உதவியாளர் பிச்சைமுத்து என்பவர் இந்த சொத்தின் போலி ஆவணங்களை அரசு அலுவலகங்களில் தயாரித்து வருவதாக தகவல் தெரிந்தவுடன் நான் திருச்சி ஆர்டிஓவிடம் புகார் அளித்ததன்பேரில், விசாரணை செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அந்த நிலத்தில் 150 வாழை மரங்கள் சாகுபடி செய்திருந்தேன். கடந்த ஜூன் 13ம் தேதி பாலகிருஷ்ணன் என்பவர் அந்த இடம் எனக்கு சொந்தம் என கூறி தகராறில் ஈடுபட்டு அத்து மீறி நுழைந்து வாழைகளை வெட்டி சேதப்படுத்திவிட்டார். இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளேன். எனவே இந்த இடத்தின் உரிமையாளர் யார் என்று திருச்சி கோர்ட் முடிவு செய்யும் வரை தொந்தரவு செய்யாமல் தடுத்து நிறுத்தவும், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் அமல்ராஜ் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்