SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

43 வருடங்களாக வாடகை கட்டிடங்களில் இ.எஸ்.ஐ. டிஸ்பென்சரிகள் பல கோடி ரூபாய் வீண்

7/13/2018 1:36:38 AM

மதுரை, ஜூலை 13: கடந்த 43 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் டிஸ்பென்சரிகளால் இ.எஸ்.ஐ. நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது. இதனால் டிஸ்பென்சரிகளை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தொழிலாளர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் ஒரு தொகையை பிடித்தம் செய்யப்படும்.  அந்த தொகையில் இ.எஸ்.ஐ.(தொழிலாளர்கள் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை)  திட்டத்தின் கீழ் அவர்களுக்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள சிகிச்சை அளிக்கும் இடமான டிஸ்பென்சரிகளில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். இவர்களுக்கு மேல் சிகிச்சையோ, அல்லது பரிசோதனைகளோ தேவைப்பட்டால், அவர்கள் இ.எஸ்.ஐ. தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

மதுரை மாவட்டத்தில், நகர் பகுதியில் தல்லாகுளம், பழங்கானத்தம், பொன்னகரம், மணிநகரம், முனிச்சாலை என 5 இடங்களிலும், புறநகரில் திருநகர், திருமங்கலம், பரவை, மேலூர் மற்றும் சிலைமான் என 5 இடங்களில் என மொத்தம் 10 இடங்களில் இ.எஸ்.ஐ. டிஸ்பென்சரிகள் உள்ளன. இவை அனைத்தும், மதுரை தத்தனேரியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த தலைமை மருத்துவமனையும் 7 டிஸ்பென்சரிகளும்தான் சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது. திருமங்கலம், மேலூர் மற்றும் சிலைமான் ஆகிய 3 இடங்களில் உள்ள டிஸ்பென்சரிகள் வாடகை கட்டிடத்தில்தான் இயங்குகிறது.

இந்த டிஸ்பென்சரிகளில் மேலூர் டிஸ்பென்சரி 43 ஆண்டுகளாகவும், திருமங்கலம், சிலைமான் ஆகிய இரு டிஸ்பென்சரிகள் 29 ஆண்டுகளாகவும் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. ஒவ்வொரு டிஸ்பென்சரிக்கும் கொடுத்த வாடகையை கணக்கிட்டு பார்த்தாலே புதிய டிஸ்பென்சரியை சொந்தமாக கட்டியிருக்கலாம். இ.எஸ்.ஐ. நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மதுரை மாவட்டத்தில் உள்ள 10 டிஸ்பென்சரிகளும், மதுரை தத்தனேரியில் உள்ள தலைமை மருத்துவமனையின்  மருத்துவ கண்காணிப்பாளர் மேற்பார்வையில்தான் செயல்படுகிறது. இவருக்கு மருத்துவம் தொடர்பான அதிகாரம் மட்டும்தான் உள்ளது. டிஸ்பென்சரிகள் விரிவாக்கம், மேம்படுத்துதல் சொந்த கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்(தொ.அ.ஈ) துறைதான் மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், 3 டிஸ்பென்சரிகளில் 2க்கு தலா 29 ஆண்டுகளும், ஒரு டிஸ்பென்சரிக்கு 43 ஆண்டுகளும் வாடகை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாடகையை கணக்குப்பார்த்தால் 3 டிஸ்பென்சரிகளையும் புதிதாக சொந்த இடத்திலேயே கட்டியிருக்கலாம். இனியாவது வாடகை கட்டிடத்தில் இயங்கும் 3 டிஸ்பென்சரிகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்