SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழிப்பறி, திருட்டை தடுக்க மதுரை வீதிகளில் சிசிடிவி கேமராக்கள் பந்தடியில் 40 இடங்களில் அமைப்பு

7/13/2018 1:36:21 AM

மதுரை, ஜூலை 13: மதுரை மஹால் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள பந்தடி பகுதியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் ெபாருத்தப்பட்டன. இதனை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் துவக்கி வைத்து பேசும்போது, ‘‘மதுரை நகரில் நவீன முறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்களை பொருத்துவதன் மூலம் குற்றங்களை தடுக்கலாம் என மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தவறான எண்ணங்களுடன் வருபவர்கள் கேமராக்களை பார்த்து தங்களது முடிவை மாற்றி கொள்வார்கள். பந்தடியில் 1 முதல் 9 தெருக்கள் வரை 40 கேமராக்கள் பொருத்தப்பட்டு தெற்குவாசல் காவல்நிலையத்தில் அவை கண்காணிக்கப்படும்.

வெளியூர் செல்வோர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்றால் அவர்களது வீட்டில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தற்போது 150 பேர்களுக்கு 50 பேர் மட்டுமே தகவல் தெரிவித்து விட்டுச் ெசல்கின்றனர். இந்த எண்ணிக்கை உயர வேண்டும்’’என்றார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சசிமோகன், ஜெயந்தி, மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர். சொந்த கட்டிடம் எப்போது?
மதுரை மண்டல அளவில், மதுரையை தவிர, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மொத்தம் 46 இ.எஸ்.ஐ. டிஸ்பென்சரிகளும், ஒரு இ.எஸ்.ஐ. தலைமை மருத்துவமனையும் (சிவகாசி) உள்ளது.

இந்த தலைமை மருத்துவமனையும், இதில் 39 டிஸ்பென்சரிகளும் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில்தான் செயல்படுகிறது. குறிப்பாக அம்பாசமுத்திரம் டிஸ்பென்சரி 62 வருடங்களாகவும், விருதுநகர் டிஸ்பென்சரி 55 வருடங்களாகவும், மானாமதுரை டிஸ்பென்சரி 53 வருடங்களாகவும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு  வருகிறது. இத்தனை வருடங்கள் கொடுத்த  வாடகை பணத்தில் இ.எஸ்.ஐ. நிர்வாகம் அனைத்து டிஸ்பென்சரிகளையும் சொந்த கட்டிடமாக மாற்றியிருக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்