ரேஷன் கார்டு குறைதீர் முகாம் : 17 மண்டலங்களில் நாளை நடக்கிறது
7/13/2018 1:19:30 AM
சென்னை: குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் 17 மண்டல அலுவலகங்களில் நாளை நடக்கிறது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, சென்னையில் 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே நாளை (14ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருட்கள் கிடைப்பது குறித்தும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் நுகர்வோருக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிலிகுலாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு 2 ராஜ நாகம் வருகை
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கொலையான பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
விபத்தில் பலியானவரை எரித்த விவகாரம் போலீசார் விசாரணை அறிக்கை தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து மாணவர்கள் 5 பேர் படுகாயம்: போதை டிரைவரால் விபரீதம்
கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை
வேலை வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி போலீஸ்காரர் முருகன் சரண்