SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிந்தாதிரிப்பேட்டை குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அதிமுக, திமுக, பொதுமக்கள் எதிர்ப்பு

7/13/2018 1:19:17 AM

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதியதாக நேற்று திறக்க இருந்த டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு புதிய டாஸ்மாக் கடையை திறப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு, தொடர்ந்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் வருகிறார்கள். இந்நிலையில் சென்னை, அண்ணாசாலை அருகே சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சாமி நாயக்கன் தெருவில் நேற்று மதியம் 12 மணிக்கு புதியதாக ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, நேற்று முன்தினம் இரவு மதுபானங்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து கடைகளில் இறக்கி வைத்திருந்தனர். கடையின் மேல் பகுதியில் ஏ.சி. வசதியுன் கூடிய பார் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை கேள்விபட்ட அப்பகுதி மக்கள் மற்றும் திமுக பகுதி செயலாளர் மதன்மோகன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், காங்கிரஸ், பாஜ நிர்வாகிகளுடன் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு சாமி நாயக்கன் தெருவில் கட்சி கொடிகளுடன் டாஸ்மாக் கடையை திறக்கவிட மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:‘‘சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் அதிக மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சுற்றி 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அதிக கடைகள் நிறைந்த பகுதியாகும். மக்கள் கூடும் முக்கியமான இடத்தில் கடையை திறக்க கடந்த ஆண்டே திட்டமிட்டனர். அப்போது, நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து போலீசார் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட மாட்டாது என கூறி உறுதிமொழி அளித்தனர். ஆனால் அந்த உறுதிமொழியை மீறி இன்று (நேற்று) புதிதாக டாஸ்மாக் கடையையும், ஏசி வசதியுடன் கூடிய பாரையும் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இங்கு டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என எழுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதிமுக எம்.எல்.ஏவும், இந்த பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவரின் தூண்டுதலின் பெயரில், அவரின் பினாமிகள் இங்கு பார் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக மதுகடையை திறக்க முயற்சி செய்கிறார்கள். இங்கு மதுக்கடை திறந்தால் பள்ளி குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும். எனவே, இங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது’’ என்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நேற்று பிற்பகல், போராட்டம் நடத்தியவர்களிடம் மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்