SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில்நுட்ப எஸ்ஐ பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு

7/12/2018 7:08:18 AM

விழுப்புரம், ஜூலை 12: தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில், 309 எஸ்ஐ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக மாவட்டந்தோறும் எஸ்பி அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் இதற்கான உதவி மையத்தை எஸ்பி ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த உதவி மையம் ஒரு தொழில்நுட்ப ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் கொண்டு செயல்படும்.

இங்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடி
யாகவும், 04146-220161 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். தேர்வாளர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு ஆன்லைனில் தாங்களாகவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடியாக நடத்தப்படுகிறது. போட்டி தேர்வில் கலந்துகொள்ளும் தேர்வாளர்கள், வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அப்படி யாரேனும் உங்களிடம் தொடர்பு கொண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்