SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

7/12/2018 7:07:52 AM

விழுப்புரம், ஜூலை 12:  பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது.விழுப்புரம் அருகே உள்ள ராமையன்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகள் பிரியா (20). இவரும், வாக்கூர் பகண்டை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் வேன் டிரைவர் விஜயபிரதாப்பும் (24) கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய
வரவே அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரியாவிற்கு அவரது பெற்றோர், வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து, இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரியாவும், விஜயபிரதாப்பும் வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த பிரியாவின் உறவினர்கள், விஜயபிரதாப்பை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிரியாவும், விஜயபிரதாப்பும் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் பாதுகாப்பு கோரி எஸ்பி ஜெயக்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்