SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

7/12/2018 7:07:33 AM

விழுப்புரம், ஜூலை 12: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான கார், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டில், விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சோதனை சாவடி உள்ளது. தலைமை காவலர் அமானுல்லா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. காரில் வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவளாகம் பகுதியை சேர்ந்த நாகமுத்து மகன் மதன் (28) என்பதும், 8 பெட்டிகளில் 360 மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மரக்காணம் கலால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கார், மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். காரை ஓட்டி வந்த மதன் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்