SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடர் திருட்டு சம்பவம் 2வது முறையாக வாலிபர் குண்டாசில் கைது

7/12/2018 3:05:54 AM

சேலம், ஜூலை 12:  சேலம் கன்னங்குறிச்சி அடுத்த ரோஸ் கார்டன் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற முத்தையன் (23). கடந்த மே 23ம் தேதி முயல்நகர் ஜங்சன் பகுதிக்கு சென்ற இவர், அவ்வழியாக வந்த கொண்டப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை தடுத்து நிறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி 1500 பணம் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்தையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 முத்தையன் கடந்த மே மாதத்தில் கன்னங்குறிச்சி பகுதியில் 6 திருட்டு சம்பவங்களிலும், இடைப்பாடி பகுதியில் ஒரு திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டார். ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு குண்டர் தடுப்பு சடடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவரை, 2வது முறையாக குண்டாசில் அடைக்க துணை கமிஷனர் தங்கதுரை, போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர், முத்தையனை 2வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்