SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

7/12/2018 2:49:01 AM

கோவை, ஜூலை 12:  கோவை பீளமேடு விமானநிலைய வளாகத்தில் ஏராளமான கால்டாக்சிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், விமானத்தில் வரும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது குறித்து கால் டாக்சி டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. விமான நிலைய வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், விமான நிலைய அலுவலர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து ெகாண்டனர். விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகளை கால் டாக்சியில் மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். மது குடித்து விட்டு டாக்சி ஓட்டக்கூடாது. பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

விமான நிலைய வளாகம் அல்லது கால் டாக்சிகளில் பயணிகள் தங்களது உடைமைகளை மறந்து விட்டு சென்று விட்டால் அது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பயணிகள் தவறவிட்ட பொருட்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
விமான நிலைய வளாகத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கால் டாக்சியில் பயணம் செய்யும் நபர்களின் பேச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்