SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹவாலா கடத்தலில் பறிபோன ரூ.3.13 கோடியை மீட்காத போலீசார்

7/12/2018 2:48:49 AM

கோவை, ஜூலை 12: கோவை மதுக்கரை பைபாஸ் ரோட்டில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3.90 கோடி ரூபாயுடன் வந்த கார் மடக்கி கடத்தப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக பரமத்தி போலீஸ்  இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுக்கள் தர்மேந்திரன், பழனிவேல், அர்ஜூனன், இன்பார்மர்களான திருச்சூரை சேர்ந்த சுதிர், சுபாஷ், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தொகை ஹவாலா பணம் என தெரியவந்தது. கடத்தல்காரர்களிடமிருந்து 77 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 3.13 கோடி ரூபாய் எங்கே போனது என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஹவாலா கடத்தல் மன்னன் கோடாலி ஸ்ரீதர் (60), அவர் மகன் அருண் (35) ஆகிேயார் 3.13 கோடி ரூபாயுடன் வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி என்ற கிராமத்திற்கு சென்று ஸ்ரீதர் மற்றும் அருண் குறித்து மதுக்கரை போலீசார் விசாரித்தனர். அவர்கள், வீட்டை விட்டு சென்று பல மாதங்களாக விட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீதர் சிக்கினால், ஹவாலா கடத்தலில் தொடர்புள்ள மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளது. போலீஸ் உயரதிகாரிகளின் ரகசிய தகவலால் தான், ஸ்ரீதரை பிடிக்காமல் விட்டு விட்டதாகவும் தகவல் பரவியுள்ளது. ஸ்ரீதர் கைது செய்யாமல் விட்டதால் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் தப்பிவிட்டனர். ஸ்ரீதர் வசம் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்துள்ளது. இந்த பணத்தை அவர் மாற்றியிருக்கலாம் என தெரிகிறது. திருச்சூரில் ஸ்ரீதர் குடும்பத்தினர் பெயரில் ஏலக்காய் மற்றும் ரப்பர் எஸ்டேட் உள்ளது. இந்த ெசாத்து ஹவாலா பணத்தில் வாங்கியதாக தெரிகிறது. 2 ஆண்டாகியும் இந்த வழக்கு முன்னேற்றமின்றி முடிவுக்கு வராமல் முடங்கி கிடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்