SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே நாளில் 405.78 டன் மக்காத குப்பை சேகரிப்பு

7/12/2018 2:48:39 AM

கோவை, ஜூலை 12: ேகாவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை சம்பந்தப்பட்டவர்களே பிரித்து தர வேண்டும். அதை செய்ய தவறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்கள் மக்கும் குப்பைகளை சேகரிக்கவும், புதன்கிழமை மட்டும் மக்காத குப்பைகளை பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கவும் மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து வாரந்ேதாறும் புதன்கிழமை மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது.  அதன்படி, நேற்று 56வது வாரமாக நகரில் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 76.08 டன், மேற்கு மண்டலத்தில் 93.54 டன், வடக்கு மண்டலத்தில் 74.63 டன், தெற்கு மண்டலத்தில் 65.28 டன், மத்திய மண்டலத்தில் 96.25 டன் என மொத்தம் 405.78 டன் மக்காத குப்பைகள் நேற்று சேகரிக்கப்பட்டது. இந்த மக்காத குப்பைகளை சேகரித்த துப்புரவு பணியாளர்கள் தங்களது மண்டலங்களில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திடம் விற்றனர். இதன் மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.10.14 லட்சம் வருவாய் கிடைத்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்