SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இட்லி கடை மேலாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: வடமாநில வாலிபர் கைது

7/12/2018 2:40:00 AM

வேளச்சேரி: வேளச்சேரி நூறடி சாலையில் பிரபல இட்லி கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு கடந்த 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந்த மகேந்திரசிங் (26) என்பவர் வந்து இட்லி வாங்கி சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் கடைக்கு வந்த மகேந்திரசிங், ‘சாம்பாரில் கரப்பான் பூச்சி இறந்து கிடக்கிறது. இதை பாருங்கள் என மேலாளர் பாண்டியன் (35) என்பவரிடம் காட்டி உள்ளார்.  அதற்கு பாண்டியன், ‘‘சாரி சார். ஏதோ தவறு நடந்துள்ளது. இனி இப்படி எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த மகேந்திரசிங், ‘‘இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம், புகார் கொடுக்க உள்ளேன்.

புகார் கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் 5 லட்சம் பணம் தர வேண்டும்’’ என மிரட்டியுள்ளார். ஆனால் பாண்டியன் எங்களிடம் பணம் இல்லை. இந்த 1000 ரூபாயை வைத்துக்கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம், மகேந்திரசிங் மீண்டும் இட்லி கடைக்கு வந்தார். பின்னர், மேலாளர் பாண்டியனிடம் கரப்பான் பூச்சி கிடந்த சாம்பாரை படம் பிடித்த செல்போனை காட்டி ‘‘பணம் இன்னும் கொடுக்கவில்லை. உடனடியாக கொடுங்கள்’’ எனக்கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இட்லி கடை நிர்வாகம் ரகசியமாக வேளச்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மகேந்திரசிங்கை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் மேற்கு தாம்பரம் பகுதியில் தங்கி பேக்கரி ஒன்றில் வேலை செய்பவர் என்பதும், தாம்பரத்தில் இதேப்போல் ஒரு ஓட்டலில் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரசிங்கை கைது செய்தனர். பின்னர் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்