SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் ஏரிக்கரை பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 8 சிறுவர்கள் கைது

7/12/2018 2:39:53 AM

சென்னை: கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை சேலையூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி 8 சிறுவர்கள் அந்தப்பகுதியில் கண்டபடி சுற்றித்திரிந்தனர். போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சோதித்துப்பார்த்தபோது 8 பேரிடமும் கத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 8 சிறுவர்களையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
* தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர்  காஜாமொய்தீன் (24). இவரது நண்பர் நேதாஜி நகரை சேர்ந்த காஜா உசேன் (23). நேற்று முன்தினம் இரவு, 2 பேரும், தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர்  வழியாக வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது, அங்கு வந்த 4 பேர், அவர்களை வழி மறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா மேட்டு தெருவை சேர்ந்த மணி (56) என்பவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் சென்ட்ரல் எதிரேயுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவருடைய செல்போனை பறித்த தர்மபுரி கலப்பமேடு பகுதியை சேர்ந்த மஞ்சு (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* புழல் அடுத்த புத்தாகரம் கமலம்நகரை சேர்ந்த ஸ்டெல்லா (22) என்பவருக்கும்,    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், நித்திரவிளையை சேர்ந்த ஜான்மார்க் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுவாழ்க்கை ஸ்டெல்லாவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால், மனமுடைந்த ஸ்டெல்லா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், வைத்தீஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் குத்புதீன் (32), புழல் ஏரிக்கரை அருகே தள்ளுவண்டி கடையில் புட்டு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், புழல் ஏரிக்கரை அருகே மேலே சென்ற மின்சார வயர் திடீரென அறுந்து குத்புதீனின் தள்ளுவண்டி கடையில் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து குத்புதீன் பரிதாபமாக இறந்தார்.
* அண்ணாசதுக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து கண்ணாடியை பீர் பாட்டிலால் உடைத்து விட்டு பைக்கில் தப்பி சென்ற 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
* ராயப்பேட்டை ஹைதர் அலிகான் சாலையில் உள்ள ஒரு வீட்டில் போதை வஸ்துக்களை பதுக்கி வைத்திருந்த ராமநாதபுரம் எஸ்பி.பட்டிணத்தை சேர்ந்த அப்துல் மாலிக் (33), முகமது அன்வர் (24), வண்ணாரப்பேட்டை பழைய முனுசாமி கார்டன் 3வது தெருவை சேர்ந்த குமரேசன் (53) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
* பொள்ளாச்சியை சேர்ந்த சாந்தி (40) என்பவரிடம் நேற்று முன்தினம் மாலை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை பாண்ட்ஸ் சிக்னல் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு ஆட்டோவில் வந்த 3 பேர் சாந்தியின் பையை பறிக்க முயன்ற வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கோபி (48), யானை கவுனி பகுதியை சேர்ந்த பாபு (35), கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திக் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (33). இவரது நண்பர் பூந்தமல்லியை சேர்ந்த முரளி (28). இருவரும் கடந்த 8ம் தேதி இரவு அய்யப்பன்தாங்கல் பகுதியில் வேலையை முடித்து விட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆயில்மில் சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் சாய்ந்தது. இதில், இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
* பள்ளிக்கரணையில் பில்டிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருபவர் பிரகாஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரின் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தரமணி அன்பழகன் நகரைச் சேர்ந்த காவலாளி ராஜேந்திரன் (64) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
 பம்மல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனத்தில் தொடர்ந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்த பம்மல் கிருஷ்ணா நகர் என்எஸ்கே தெருவை சேர்ந்த சரவணன் (27) என்பவரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.
* திருவொற்றியூர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த பாலசுந்தரம் (60) என்பவர் நேற்று முன்தினம் இரவு ஒண்டிகுப்பம் அருகே சாலை கடந்து முயன்றபோது, அவ்வழியாக வந்த பைக் அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
* அம்பத்தூர் தொழிற்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நியூ காலனியை சேர்ந்த ஹேமாவதி (57) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் அமர்ந்து, பூ கட்டிக்கொண்டு இருந்தபோது, அவ்வழியாக வந்த 2 பேர் அவர் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்