SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன அழுத்தம் போக்க 3 ஷிப்ட் முறையில் பணி கமிஷனருக்கு போலீசார் வேண்டுகோள்

7/12/2018 2:24:28 AM

மதுரை, ஜூலை 12: மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தொடர்ந்து பணியாற்றுவதால் மன அழுத்தம், குடும்பத்தில் பிரச்னை உள்ளிட்டவைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் திருவிழாக்கள், சிலைகள் பாதுகாப்பு, மறியல் என தொடர்ந்து சம்பவங்கள் நடப்பதால் போலீசார் ஓய்வு இல்லாமல் தவித்து வந்தனர். இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 5 கோபுர வாசலில் போலீசார் துப்பாக்கி ஏந்தி 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை மற்றும் இரவு இரண்டு முறை சுழற்சியில் பணியாற்றி வருகின்றனர். இதனை 3 ஷிப்ட் பணியாக மாற்றி பணி வழங்க வேண்டும் என போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

போலீசார் கூறும்போது, ‘இதற்கு முன்பிருந்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தான் பொறுப்பு ஏற்ற உடன் முதல் முறையாக காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பிறந்தநாள், திருமணநாள் ஆகிய இரு நாட்கள் கட்டாய விடுப்பு வழங்க உத்தரவிட்டார். பணி சுமையில் தவிக்கும் எங்களுக்கு வருடத்தில் இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை கொடுத்து இருப்பது மிக மகிழ்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் மன அழுத்ததை போக்கவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் போலீசாருக்கு தற்போது 2 முறை சுழற்சியில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மூன்று ஷிப்டாக மாற்ற வேண்டும். சென்னையில் 3 ஷிப்ட் பணி நடை முறையில் உள்ளது. அதைப்போல் இங்கும் இந்த திட்டத்தை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கொண்டு வர வேண்டும். இதனால் போலீசார் மன உளைச்சல் இல்லாமல் பணியாற்ற உதவியாக இருக்கும்’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்