SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊறுகாய் தொழிலுக்கு ஜிஎஸ்டியில் வரிவிலக்கு வேண்டும் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

7/12/2018 2:24:21 AM

மதுரை, ஜூலை 12: தமிழ்நாடு ஊறுகாய் பொட்டல உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் கந்தசாமி தலைமை வகித்து பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் ஊறுகாய் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு ரூ.700 முதல் ரூ.800 கோடி அளவிற்கு விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.120 கோடி அளவிற்கு விற்பனை நடக்கிறது. இத்தொழிலின் மூலப்பொருட்களாக காய்கனிகள் 75 சதவீதம், உப்பு 15 சதவீதம், 10 சதவீதம் மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், உள்ளீட்டு வரியை கழிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டியில் ஊறுகாய்க்கு 12சதவீதம் என்பது அதிகபட்ச வரிவிதிப்பாகும். இது, ஊறுகாய் உற்பத்தியாளர்களை பாதித்துள்ளது.
தமிழகத்தில், ஊறுகாய்த்தொழில் பெரும்பாலும் சிறு, குறுந்தொழில்களாக நடைபெற்று வருகிறது. இங்கு கல்வியறிவு குறைந்த கிராமப்பகுதி பெண்கள் அதிகளவில் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இன்றும், பல நூற்றுக்கணக்கான மிதிவண்டி வியபாரிகளின் வாழ்வாதாரமாகவும் இத்தொழில் இருந்து வருகிறது. ஊறுகாய்க்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரிவதிப்பு ஊறுகாய்த் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கி உள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகம் செய்வதற்கு முன்பு 50 கிராமுக்கு கீழே உள்ள ஊறுகாய் பொட்டலங்களுக்கு தமிழக அரசு வரிவிலக்கு கொடுத்திருந்தது. 50 கிராமுக்கு மேலே இருக்கக் கூடிய பாட்டில்கள் மற்றும் கண்டெய்னர்களுக்கு 5 சதவிகித வரி விதித்திருந்தது. இந்நிலையில் தான் ஜிஎஸ்டியில் 12 சதவீதம் என அதிகபட்சமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஊறுகாயை ஹெச்எஸ்என் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க ஊறுகாய் தொழிலை காப்பாற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து ஊறுகாய்க்கு விலக்கு அளிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்ச வரிவிதிப்பாவது விதிக்க வேண்டும்’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்