SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடைந்து போனதால் மக்கள் அவதி பாலத்தை கட்டாமல் மாநகராட்சி இழுத்தடிப்பு

7/12/2018 2:24:14 AM

மதுரை, ஜூலை 12: உடைந்து போன பாலத்தை கட்டித்தராமல் மாதக்கணக்கில் மாநகராட்சி இழுத்தடித்து வருவதால் கமிஷனரிடம் இப்பகுதி மக்கள் மீண்டும் மனு அளித்தனர். மதுரை கோ.புதூரில் ராமவர்மா நகர், சங்கர் நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். மற்றொரு பகுதியில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இந்த இரு பகுதிகளுக்கும் நடுவே கால்வாய் செல்கிறது. இரு பகுதிகளையும் இணைக்கும் பாலம் பல ஆண்டுகளாக மக்களுக்கு பயன்பட்டு வந்தது. இந்த பாலத்தை கடந்து தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

தொழிற்பேட்டைக்கு வரும் பெண் ெதாழிலாளர்களும் இந்த பாலத்ைத கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலத்தில் அதிக எடை ஏற்றும் லாரிகள், வாகனங்கள் சென்றதால் கடந்த 8 மாதத்திற்கு முன்பு உடைந்து விட்டது. உடனே புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மேலும் அன்றிலிருந்து அனைவரும் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்சென்று வருகின்றனர். இதுவரை புதிய பாலத்தை மாநகராட்சி கட்டவில்லை. பல முறை மனு அளித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், புதூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஹமீது உள்ளிட்டவர்கள், கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர். அதற்கு அவர் இன்னும் 10 நாட்களில் பாலம் கட்டும் பணி துவங்கும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்