SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்ணச்சநல்லூர் அருகே கோயில் தர்மகர்த்தாவிடம் ரூ.25 ஆயிரம் பறிப்பு

7/11/2018 3:44:14 AM

மண்ணச்சநல்லூர், ஜூலை 11:  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு தளுதாளப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடேசன் மகன் வெங்கட்ராமன் (55). கோயில் தர்மகர்த்தாவாக உள்ளார். தற்போது கோயில் வேலை நடைபெற்று வருவதால் பணம் தேவைபட்டது. ஊரில் வசூல் செய்த பணம் பற்றவில்லை என்பதால் வெங்கட்ராமன் வீட்டில் இருந்த தங்க சங்கிலியை மண்ணச்சநல்லூர் எதுமலை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து ரூ.25 ஆயிரம் ரூபாய் எடுத்தார்.

அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு மண்ணச்சநல்லூர் எதுமலை ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள் வெங்கட்ராமனின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அருகில் இருந்தவர்கள் பைக்கில் விரட்டிச் சென்றும் அந்த ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமன் இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்