SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தல் புதிய சட்டத்தில் கூடுதல் உரிமைகள் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் வலியுறுத்தல்

7/11/2018 3:43:38 AM

திருச்சி, ஜூலை 11: மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தில் கூடுதல் உரிமைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என திருச்சியில் நடந்த மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் மாநாடு டிஎம்எஸ்எஸ்எஸ் எம்பவர்மென்ட் சென்டரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தாா்.
மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், டிஎம்எஸ்எஸ்எஸ் எம்பவர்மென்ட் சென்டர் இயக்குநர் ஜான் செல்வராஜ் சிறப்புரையாற்றினர். புறநகர் மாவட்ட தலைவர்  குமார், காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ராமேஷ்பாபு, பெல் மாற்றுதிறனாளிகள் நலச்சங்க தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் ரஞ்சித் ஆகிேயார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கான புதிய சட்டத்தில் இன்னும் கூடுதல் உரிமைகளை சட்டத்தில் தர வேண்டும், ரயில் கட்டண சலுகை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் மாற்றுதிறனாளிகள் பெற மாநில அரசால் தரப்படுகிற ஒரே அடையாள சான்றை அனைத்து துறைகளும் ஏற்க வைக்கவேண்டும். மலைகோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் உ்ளளிட்ட சமீபத்தில் நீக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும், மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை இணைக்க வேண்டும். திருச்சி ரயில்நிலையத்தில் பேட்டரி கார் அனைத்து பிளாட்பாரங்களுக்கும் சென்று வர அனுமதிக்க வேண்டும். வருவாய்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை மாற்றுதிறனாளிகள் நலத்துறையே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர் மாவட்ட பொருளாளர் புஷ்பநாதன் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்