SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

7/11/2018 3:00:07 AM

பெரம்பலூர்,ஜூலை 11: சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் நல போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் காந்தி சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், வேப்பந்தட்டை ஜெயராமன், குரும்பலூர் ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, வழக்கறிஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளையும், இயற்கை சூழலையும் பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மின்வாரிய (சிஐடியூ) வட்ட தலைவர் அகஸ்டின், இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஈஸ்வரன், சுற்றுச்சூழல் சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்