SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு விண்ணப்பிக்க ஆக.31ம் தேதி கடைசி

7/7/2018 2:14:41 AM

பெரம்பலூர், ஜூலை 7:  படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகு தியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் (பொ) அழகிரிசாமி தகவல் தெரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் மூலம் விண்ணப் பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.இதற்கான கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து 5வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 2013 ஜூன் 30ம் தேதிக்கு முன் பதிவுசெய்தவராக இருக்கவேண்டும். மனுதாரர் தனது வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும்.2013 ஜூன் 30ம்தேதி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதேபோன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்விபயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் வரும் ஆகஸ்டு 31ம்தேதி வரை அலு வலக வேலை நாட்களில் காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை பெறப்படும். மனுதாரர் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்வதற்கு அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாளஅட்டை ஆகியவற்றுடன் வரவேண்டும். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பம் பெறத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்