SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாட்பாரத்தில் தொடரும் நெருக்கடி காட்டூர், வாலாங்குளத்தில் ரயில்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி

6/14/2018 5:57:31 AM

கோவை, ஜூன் 14: ேகாவை ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரம் உள்ளது. இந்த ரயில் நிலைய மார்க்கமாக தினமும் 145 பயணிகள் ரயில் மற்றும் 30க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 5 முதல் 7 ரயில்கள் பல்வேறு பிளாட்பாரங்களில் உள்ள தண்டவாளங்களில் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது. ரயில்கள் பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பாரம் வழியாகவே இயக்கப்படுகிறது. குறிப்பாக கேரளா நோக்கி செல்லும் ரயில்களும், வரும் ரயில்களும் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பாரங்களை பயன்படுத்தும் நிலையிருக்கிறது. பாசஞ்சர் ரயில்கள் 3வது, 5வது, 6வது பிளாட்பாரம்களில் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு, திருப்பூரில் இருந்து வரும் ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வரும்போது சிக்னல் தடை ஏற்படுகிறது. குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயில்கள் நிறுத்தப்படும்போது கோவை நோக்கி வரும் ரயில், வடகோவை ரயில் நிலையம் கடந்து காட்டூர் பகுதியில் நிறுத்தப்படுகிறது. இதேபோல் போத்தனூர் ரயில் நிலையம் கடந்து கோவை வரும் ரயில்கள் வாலாங்குளத்தின் கரை அருகேயுள்ள ரயில் பாதையில் 10 முதல் 15 நிமிட நேரம் வரை காத்திருக்கவேண்டியுள்ளது. பிளாட்பாரங்களில் கூடுதல் தண்டவாளம் அமைக்க போதுமான இடவசதி கிடையாது. 6வது பிளாட்பாரத்தை அடுத்துள்ள ரயில் பாதைகளில் கோச் கேர் சென்டருக்கு வரும் ரயில் பெட்டிகள் நிறுத்தப்படுகிறது. சரக்கு ஏற்ற வரும் ரயில்களும் தண்டவாளத்தின் கடைசி பகுதியில் வரிசை கட்டி நிறுத்தப்படுகிறது. சிக்னல் கிடைக்காமல் கோவை ரயில் நிலையத்திற்கு முன்பே ரயில்கள் நிறுத்தப்படுவதால் வெறுப்படையும் பயணிகள் சிலர், இறங்கி நடந்து செல்கிறார்கள். இதை தவிர்க்க, ரயில்களை காத்திருப்பில் வைக்காமல் இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்