SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.143 லட்சத்துக்கு விற்ற காங்கயம் இன மாடுகள்

6/14/2018 5:56:48 AM

காங்கயம், ஜூன் 14: காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில், காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இந்த வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வந்தனர்.

மாடுகளை விற்கும் விவாசாயிகளும், வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு.
நேற்று 160 மாடுகள் வந்திருந்தன. இதில், காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்றது. பசுங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடந்த சந்தையில் 85 கால்நடைகள் ரூ.143 லட்சத்திற்கு விற்பனை நடந்ததாக சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்