SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறுகூட்டலுக்கு 15 நாளில் விண்ணப்பிக்க வேண்டும் ஜூலை 8ல் இளநிலை உடனடித்தேர்வு பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு

6/14/2018 2:14:35 AM

திருச்சி, ஜூன் 14: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (பிஎஸ்சி) பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இளநிலை பாடப்பிரிவுகளுக்குரிய அனைத்துத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 8ம் தேதி இளநிலைப் பாடங்களுக்குரிய உடனடித் தேர்வுகள் நடைபெற உள்ளன. இளநிலைப் பாடப்பிரிவுகளில் 2015-2018ம் கல்வியாண்டில் பயின்று முடித்து ஏதேனும் ஒரு தாளில் மட்டும் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் மேற்படி உடனடித் தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை கல்லூரி வாயிலாக ஜூன் 26ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு  அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.750ஐ பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அல்லது ‘BHARATHIDASAN UNIVERSITY, TIRUCHIRAPPALI’ என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு (ரீவேல்யுஷன்), ஒளிநகல் (டிரான்ஸ்பரன்சி), மறுகூட்டல் (ரீடோட்டலிங்) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ச்சிப் பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களுக்கும் எண்ணிக்கை வரையறையின்றி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பி க்கலாம். அதேபோல விடைத்தாள் ஒளிநகல் மற்றும் மறுகூட்டல் தேவைப்படின் எண்ணிக்கை வரையறையின்றி அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்