SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்ணச்சநல்லூரில் இடுகாட்டில் ஆறடி நீளத்தில் குழி தோண்டி மூடல் பெண் கொன்று புதைப்பா? பொதுமக்கள் பீதி

6/14/2018 2:14:24 AM

மண்ணச்சநல்லூர், ஜூன் 14:  மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உளுந்தங்குடி இடுகாடு அருகே ஆறடி நீளத்தில் குழி தோண்டி மூடிய அடையாளம் உள்ளது. குழி அருகே பெண்கள் அணியும் ஆடைகளும் சிதறிக் கிடந்தது. இதனால் பெண் யாராவது கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டுள்ளாதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது உளுந்தங்குடி. உளுந்தங்குடியில் அண்ணாமலைநகர் பகுதியில் ஆதி திராவிடர்களுக்கான இடுகாடு உள்ளது.  இந்நிலையில் நேற்று அந்த வழியாக சென்றவர்கள் இடுகாடு அருகே சுமார் ஆறடி நீளத்தில் குழி தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதிக்கு யாரும் செல்ல மாட்டார்கள். மது குடிப்பவர்கள் மட்டும் யாராவது அங்கு சென்று மதுபானங்கள் குடிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக இறந்தவர்கள் யாரும் இடுகாட்டில்  எரிக்கவோ, புதைக்கப்படவோ இல்லை. அவ்வாறு இறந்தவர்கள் புதைக்கப்பட்டால் கூட தென்வட திசையில்தான் இறந்தவர்களை புதைப்பார்கள்.

ஆனால் இந்த இடத்தில் கிழ மேற்கு திசையில் ஆறடி நீளத்தில் குழி தோண்டப்பட்டு மூடப்பட்ட அடையாளம் உள்ளது. மேலும் இந்த குழிக்கு அருகே பெண்கள் அணியும் உள்ளாடைகள் கிடந்தது. மூடப்பட்ட குழியில் அடையாளத்திற்கு வைப்பது போல இரண்டு கருங்கற்களும் கிடந்தன. மூடப்பட்ட குழியை சுற்றி ஏதோ பொருளை எரித்ததற்கு அடையாளமாக சாம்பலும், அருகில் இருந்த புற்கள் கருகியும் கிடந்தன. இதனால் அங்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.  மனித உடல் ஏதாவது அங்கு புதைக்கப்பட்டு இருக்குமோ என்று அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்