SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழுதடைந்த முசிறி நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

6/14/2018 2:14:13 AM

தா.பேட்டை, ஜூன் 14: முசிறியில் உள்ள பழுதடைந்த அரசு கிளை நூலக கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு கூடுதல் வசதிகளுடன் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறியில் 1987ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நூலகத்திற்காக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இக்கட்டிடம் அண்மையில் மிகவும் பழுதடைந்தது. இதனால் வாசகர்கள் நலன் கருதி முசிறி நல்லமுத்துப்பிள்ளை தெருவில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு கடந்த 23.10.2014 அன்று மாற்றப்பட்டது. இக்கட்டிடத்திற்கு வாடகையாக ரூ.9 ஆயிரம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை மராமத்து பணிகள் செய்வதற்காக அரசால் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடமும், கூடுதல் வசதிகளும் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் கூறும்போது, முசிறி கிளை நூலகத்தில் படித்து பயன்பெற்று  உயர் பதவியில் பலர் உள்ளனர். இந்த கிளை நூலகத்தை நாள் ஒன்றுக்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு போதிய இடவசதி எதுவுமில்லை.  இந்நிலையில் பழுதடைந்த பழைய நூலக கட்டிடத்திற்கு மராமத்து பணிகள் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பழைய நூலக கட்டிடத்திலும் இடவசதி இல்லை. சுமார் 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ள இந்த நூலகத்தில் வாசகர் நாளிதழ்களுக்கு ஒரு பிரிவும், பருவ இதழ்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், சிறுவர் நாளிதழ்கள் படிப்பதற்கான பகுதி மற்றும் சொந்த புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் பகுதி, வாசகர் குறிப்பு எடுக்கும் பகுதி, கணினியில் தேவையான தகவல்களை பார்ப்பதற்கான பகுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் இரண்டு, மூன்று டேபிள்களை மட்டும் வைத்து கொண்டு முசிறியில் நூலகத்தை செயல்படுத்துவது வருத்தமடைய செய்கிறது. இது தவிர பழைய கட்டிடத்தில் மோல்டு கம்பிகள் தெரியும் அளவிற்கு காரைகள் உதிர்ந்தும் பட்டிடத்தின் பீம் பழுதடைந்த நிலையில் அதே கட்டிடத்தை மராமத்து வேலைகள் மேற்கொள்வது, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது போன்றதாகும். எனவே திருச்சி கலெக்டர் முசிறியில் உள்ள பழைய நூலக கட்டிடத்தை மறு ஆய்வு செய்து தரமான கட்டிடமாகவும், வாசகர்களுக்கு பயன்பெறும் வகையிலான பகுதிகளும் அமைக்க வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம் என்று கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • militaryparangimalai

  ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

 • guwahatidiadhani

  குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

 • koreanwarmeet

  கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

 • srilankakitefestival

  இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

 • studendsrussiachennai

  ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்