SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேச்சேரி கோயில் திருவிழாவில் ஆடல்,பாடல் நிகழ்ச்சியை தடுத்த இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு

6/14/2018 2:12:45 AM

மேச்சேரி, ஜூன் 14:காடையாம்பட்டி அருகே, கோயில் திருவிழாவின் போது அனுமதியின்றி நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை தடுத்த போலீசார் மீது, சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. இதையடுத்து, அங்கு டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் நிலவுகிறது.

 சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே, நல்லூர் பகுதியில் தோட்டக்கார முனியப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த வாரம் முதல், தெவத்திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி, கோயிலில் தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு, கோயில் வளாகத்தில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், போலீசாரிடம் அனுமதி கேட்ட போது, போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், தடையை மீறி கோயில் முன்பு நேற்றிரவு 10 மணியளவில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆடியோ செட் போடப்பட்டு, அதிக சப்தம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்தது.

 இதனிடையே, தடையை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடப்பது குறித்து தகவல் அறிந்த காடையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத், எஸ்ஐ பழனிசாமி மற்றும் 8 போலீசார் விரைந்து சென்று, நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விழா குழுவை சேர்ந்த இளைஞர்கள், கும்பலாக வந்து இன்ஸ்பெக்டரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், உடன் வந்த போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றனர். ஒரு சிலர், போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதனால், அந்த இடமே களேபரமானது. இது குறித்த தகவலின் பேரில், ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.  இதை தொடர்ந்து, போலீசாரை தாக்கிய நபர்களை பிடிக்கும் பணி தொடங்கியது. இரவு முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று, போலீசாரை தாக்கிய நபர்களை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், அதிவிரைவு படை போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்