SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

6/14/2018 2:12:34 AM

சேலம், ஜூன் 14: சேலத்தில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் ஜம்பு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை, காலமுறை ஊதியம், மாற்று பணி உள்பட 15அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘டாஸ்மாக்  ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.

 காலமுறை ஊதியம், மாற்றுப்பணி உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை, தமிழக அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் வருகிற 28ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தொடர்ந்து கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முத்துசாமி, பழனிசாமி, மாயவன், மாணிக்கம், பெரியசாமி, விஜயகுமார், செல்வராசு, ஆறுமுகம், குமார், காமராஜ், சிவகுமார், அண்ணாதுரை உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்