SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரைம் செய்திகள் கல்லூரி மாணவி பலி

6/14/2018 1:26:18 AM

மதுரை மீனாட்சிநகர் 9வது தெருவை சேர்ந்தவர் தம்பிதுரை மகள் பூஜா(17). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது சுவிட்சை ஆன் செய்யும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவன் தற்கொலைவாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் நவீன்குமார்(19). பரவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாடிப்பட்டி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு       
பேரையூர் அருகே ஆவல்சூரம்பட்டி பெரியசாமி மனைவி அழகுப்பிள்ளை(28). இவர் கதவுதிறந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்த அழகுப்பிள்ளை சத்தம்போட்டுள்ளார். வாசலில் ங்கிகொண்டிருந்தவர்கள் எழுந்து வருவதற்குள் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டான். சங்கிலியை பிடித்ததால் அழகுப்பிள்ளை கையில், ஒன்றரை பவுன் மட்டும் சிக்கியது. நான்கரை பவுன் பறிபோனது. நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.பாலீஷ் மோசடி
மதுரை பாத்திமா கல்லூரி எதிரே மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் மனைவி இந்துஜா(33). இவரிடம் 2 பேர் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி, தான் அணியிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார்.

அதனை மர்ம நபர்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி கொண்டு வரும்படி கூறி அனுப்பினர். ஆனால், அந்த நகைகளுடன் 2 பேரும் மாயமாகினர். இது குறித்த புகாரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மணல் திருடிய லாரி பறிமுதல்அவனியாபுரம் அருகே சிந்தாமணி ரிங்ரோட்டில் அவனியாபுரம் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.விசாரணையில், சிலைமான் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான லாரி என தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய டிரைவர் மற்றும் கிளீனர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

வெள்ளி கவசம் திருட்டு சோழவந்தான் பேட்டை வயல்வெளியில் வெள்ளை பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இங்கு பூசாரியாக அமாவாசை என்பவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜைகளை முடித்து கோயிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நேற்று வழக்கம்போல் வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே மூலவர் விநாயகர் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ வெள்ளி கவசம் திருடுபோயிருந்தது. பூசாரி அமாவாசை கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை டிஎஸ்பி மோகன்குமார் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். சோழவந்தான் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்