SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பாடத்திட்டம் நீக்கப்பட்டதா? எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

6/14/2018 1:25:51 AM

சென்னை, ஜூன் 14: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்த பாடத்திட்டம் நீக்கப்பட்டதா என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.சட்டசபையில் அறநிலையத்துறை, தமிழ்வளர்ச்சி மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மேலூர் பெரிய புல்லான்(அதிமுக) பேசும் போது, ‘‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது, அவரது வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம் பெற வைக்குமாறு கேட்டுகொள்கிறேன்’’ என்றார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், ‘‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்திட்டம் 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெறவில்லை. இது தொடர்பாக தென்மாவட்ட அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதல்வரையும், என்னையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர். தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்ற தலைப்பில் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும். இந்த பாடப்புத்தகத்தில் நேதாஜியோடு அவர் வேலை செய்தது. இந்திய ராணுவம் அமைய அவரது பங்கு, மக்களுக்காக அவர் முன்னெடுத்து சென்ற போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கருத்தும் இடம் பெற்றுள்ளது. வரும் ஆண்டு முதல் 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறுகிறது’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்