SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை போலீஸ் வேட்டையில் 564 பேர் அதிரடி கைது : குடிபோதையில் வாகனம் ஓட்டிய 53 பேரும் சிக்கினர்

6/14/2018 1:18:55 AM

சென்னை: தொடர் வழிப்பறி சம்பவங்கள் எதிரொலியாக சென்னை முழுவதும் 2ம் நாளாக நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில் முக்கிய  குற்றவாளிகள் உட்பட 564 பேரை போலீசார் கைது செய்தனர்.  சென்னையில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி சம்பவங்களை தொடர்ந்து இரவு  நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி  கூடுதல் கமிஷனர்கள் ஜெயராம், சாரங்கன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர்.

முதல் நாளான கடந்த 11ம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 3,081 பேரை போலீசார் கைது  செய்தனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. இதில் சந்தேகத்தின் பேரில் 442 ேபரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  குற்றவாளிகள் 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும், 109,110 சட்டப் பிரிவின் கீழ் 95 பேர் என மொத்தம் 564 ேபரை போலீசார் கைது  செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 53 ேபரையும் போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்