SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்பத்தூரில் வடிகால் வசதி இல்லாததால் அவதி மழைநீர் கால்வாயில் வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் சுகாதாரக்கேடு

6/14/2018 1:18:44 AM

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல ஆண்டாக வடிகால் வசதி இல்லாததால சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு  வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு,  மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய, பெரிய அளவில் சுமார் 5 ஆயிரம் கம்பெனிகள் உள்ளன. 100க்கும்  மேற்பட்ட ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், சாப்ட்வேர், கால் சென்டர் நிறுவனங்களும் செயல்படுகின்றன. இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர்,  வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த தொழிற்பேட்டையின் உட்புற சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த கால்வாய்கள் பல இடங்களில்  முறையாக பராமரிக்கப்படாததால் தூர்ந்துள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடிகால் வசதிகள் முறையாக இல்லை. பல இடங்களில் தற்காலிக  கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ரசாயன, ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. தொழிற்சாலை  கழிவுகளும் இந்த கால்வாயில் தான் விடப்படுகிறது.

இதனால், மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இந்த கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம்  வீசுகிறது. பல இடங்களில் கால்வாய் உடைந்தும், மரக்கிளைகள், குப்பை, கம்பெனி கழிவுகளும் குவிந்து தூர்ந்து கிடக்கிறது. ஒவ்வொரு மழை  காலத்திலும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியின்றி முக்கிய சாலைகள், குறுக்கு தெருக்களில் உள்ள கம்பெனிகளில் புகுந்து விடுகிறது. இதனால்,  கம்பெனி உரிமையாளர்கள் தங்களது உடமைகளை இழந்து தவிக்கின்றனர். கடந்த 3 ஆண்டாக தொழிற்பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் அதிக  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தொழில் உற்பத்தி ஆண்டுதோறும் நலிந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். வடநாட்டு  தொழிலாளர்கள் பலரும் தொழிற்பேட்டையை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சென்று விட்டனர். ஒரு சில தொழிலாளர்கள் கட்டிட பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். தேங்கும் கழிவுநீரில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்து கம்பெனி தொழிலாளர்களை கடிப்பதால், மர்ம காய்ச்சலால்  பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் சிகிச்சை பெற அம்பத்தூரில் அரசு மருத்துவமனை கூட கிடையாது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் முறையான  வடிகால் வசதி செய்து தர கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித  நடவடிக்கையும் இல்லை. இதனால் தொழிலாளர்கள் சுகாதார சீர்கேட்டால் தவித்து வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம்

50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடிகால் வசதி சரிவர இல்லாததால் தொழிலாளர்கள் நோய் பாதிப்பிற்கு  ஆளாகி வருகின்றனர். தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிலாளர்களை திரட்டி அறப்போராட்டத்தில் ஈடுப்பட வேண்டிய நிலை ஏற்படும் என  தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்