SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனித இரவையொட்டி மத நல்லிணக்க ‘சஹர் விருந்து’

6/13/2018 5:50:52 AM

மதுரை, ஜூன் 13:  ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோற்கும் நோன்பு மகத்தானது. இம்மாதத்தின் கடைசி 10நாட்களின் ஓர் ஒற்றைப்படை இரவில்தான், முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. இவ்வகையில், இந்த இரவை ‘லைலத்துல் கத்ரு’ எனும் புனித இரவாக கருதி, அதிக வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் 27ம் இரவு என்பதால், பள்ளிவாசல்களில் சிறப்பு வணக்க வழிபாடுகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை முஸ்லிம்கள் நோன்பு நோற்றனர். இதற்கென மதுரை மகபூப்பாளையத்தில் அதிகாலையில் பிரம்மாண்ட சஹர் விருந்து நடந்தது. இப்பகுதி இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய இந்த அறுசுவை அசைவ சிறப்பு விருந்து 125 படி அரிசியில் தயாரித்து, நகரின் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு இலை போட்டு பந்தி வைத்து பரிமாறப்பட்டது. இதில் இந்துக்களும் கலந்துகொண்டு உணவு பரிமாறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்