SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டின் மீது விழுந்த மரம்

6/13/2018 5:29:00 AM

கோவை, ஜூன் 13: ேகாவை கரும்புக்கடை முத்துநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று ஒரு பனை மரம் விழுந்தது. வீட்டில் யாருமில்லாத போது சாய்ந்த நிலையில் இருந்த அந்த மரம் விழுந்து விட்டது. காற்று, மழையின் காரணமாக இந்த மரம் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. மரம் விழுந்ததால் வீடு முற்றிலும் சேதமடைந்தது. அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. வீடுகளை ஒட்டியுள்ள மேலும் சில பனை மரங்கள் விழும் நிலையில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதேபோல் மருதமலை ரோட்டில் இருந்த பெரிய மரம் ஒன்று மழையின் காரணமாக நேற்று ரோட்டில் சாய்ந்தது. அவ்வழியாக வாகனங்கள் செல்லாத நேரத்தில் மரம் விழுந்து விட்டது. இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்ைத வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்