SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.54.36 லட்சம் பணிக்கொடை

6/13/2018 5:28:50 AM

கோவை, ஜூன் 13:  வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 116 பேருக்கு ரூ.54.36 லட்சம் பணிக்கொடையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 116 பேருக்கு பணிக்கொடை ரூ.54.36 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிக கூலி தொழிலாளர் உள்ள பகுதியாக வால்பாறை உள்ளது. இப்பகுதியில் 61 பதிவு செய்யப்பட்டுள்ள தேயிலை நிறுவனங்களும், 6 பதிவு செய்யப்படாத தேயிலை நிறுவனங்களும் உள்ளது. எஸ்டேட்களில் தேயிலை தோட்டத்தில் 15,768 பேர் கூலி தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ஒரு தொழிலாளி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.309 பெறுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் தனியார் நிறுவனங்கள் காலம் கடத்தி வந்தது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் பல்வேறு தரப்பு பேச்சுநடந்தது. இதனை தொடர்ந்து நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கவர்கல், வேவர்லி எஸ்டேட் பகுதியை சேர்ந்த 230 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது.இதில், முதல் கட்டமாக 116 தொழிலாளர்களுக்கு ரூ.54 லட்சத்து 36 ஆயிரத்து 261 ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் விடுப்பட்ட கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எம்.பி.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, சின்னராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ், அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் வால்பாறை அமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்