SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காருண்யாவுக்கு நிகர்நிலை பல்கலை அந்தஸ்து மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை நீட்டிப்பு

6/13/2018 5:28:40 AM

கோவை, ஜூன் 13:கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய பல்கலைக்கழக மானிய குழு(யூஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (ஏஐசிடிஇ) இவற்றின் கூட்டு வல்லுநர் குழு காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டினை மறுபரிசீலனை செய்தது. காருண்யாவின் சிறந்த கட்டமைப்பு, படிப்பதற்கு உகந்த சூழ்நிலை விடுதி வசதி, மாணவர்களின் பன்முகத்தன்மை, பேராசிரியர்களின் சிறப்பு தகுதி, தொழிற்சாலைகளுடன் உள்ள பிணைப்பு மற்றும் வேலை வாய்ப்பு, சர்வதேச அளவிலான பயிற்சி உயர்தொழீல்நுட்ப ஆராய்ச்சிகள், அரசு நிறுவனங்களின் நிதியுதவி ஆகியவற்றின் அடிப்படையில் காருண்யாவுக்கான நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரைத்து கடந்த ஜனவரியில் அனுப்பியிருந்தது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்திற்கான நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தினை நீட்டித்து அனுமதி வழங்கும் கடிதத்தை கடந்த 8ம் தேதி அனுப்பி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்