SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடி தலைமையில் விழா தமிழகத்திலிருந்து 532 விவசாயிகள் பங்கேற்பு வேளாண் இயக்குனர் விளக்கம்

6/13/2018 2:25:20 AM

திருச்சி, ஜூன் 13:  டெல்லியில் நடந்த மோடி விழாவில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் யார்? யார் என முதல்வர் தனிபிரிவுக்கு தமாகா சார்பில் முதல்வர் தனிபிரிவுக்கு அனுப்பியிருந்த மனுவுக்கு வேளாண் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த வேளாண் விழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த எத்தனை விவசாயிகள் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  எந்த திட்ட நிதி மூலம் அழைத்து செல்லப்பட்டனர், செல்வு தொகை எவ்வளவு, எந்த அடிப் படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர், விருது பெற்ற விவசாயிகள் யார் என தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.

இதற்கு வேளாண் இயக்குனரிடம் இருந்து அனுப்பப்பட்ட பதிலில், ‘தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இருந்து 532 விவசாயிகள் 27 அணிகளாக டெல்லிக்கு ஒரு அணிக்கு ரூ.80 ஆயிரம் வீதம் ரூ.21.60 லட்சம் செலவில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கண்டுனர் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்ட னர். வட்டார அளவில், வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உழவர் நண்பர்கள் மூலமாகவும், முன்னுரிமை அடிப்படையிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஒப்புதல் பேரில் அழைத்து செல்லப்பட்டனர். டெல்லியில் நடந்த விழாவில் தமிழகத்தில் உணவு உற்பத்தியில் சாதனை விவசாயிகளான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராசாத்தி ஆகிய 2 பேர் விருது பெற்றனர்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2018

    19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்