SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

6/13/2018 2:25:10 AM

திருச்சி, ஜூன் 13:  குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை திருச்சி கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:  2017-18ம் ஆண்டு ஆய்வு செய்து 634 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நல்ல ேதர்ச்சி பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழு வீச்சில் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் முழுமையாக கல்வி கற்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைக்கு அமர்த்தினால் யாராக இருந்தாலும் குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தையும், வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டும் பணிகளையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஐயப்பன் கோயில், எம்.ஜி.ஆர் சிலை, கோர்ட் வழியாக திருச்சி மாநகராட்சியில் நிறைவடைந்தது. இதில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி, புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மிளகு பாறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் எந்தியவாறு மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். கலெக்டர் பிஏ (சத்துணவு) பாஸ்கர், மாநகராட்சி சுகாதார அலுவலர் சித்ரா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் மோகன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ணபாண்டியன், தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், தொழிலாளர் துணை ஆணையர் லிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்