SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக்கில் இருந்து விழுந்து திருச்சி போலீஸ்காரர் பலி

6/13/2018 2:25:00 AM

திருச்சி, ஜூன் 13: திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர்  காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் ஜான்சன் அலெக்ஸ் (30). இவரது குடும்பத்துடன் திருச்சி பொன்மலைபட்டியில் வசித்து வந்தார். ஜான்சன், குண்டர் தடுப்பு சட்ட  குற்றவாளிகளுக்கான ஆவணங்களை தயாரித்து அதில் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கும் பணியில் இருந்தார். நேற்றுமுன்தினம் பணிமுடிந்து பைக்கில் சென்றவர் இரவு 11.40 மணிக்கு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே ரைஸ்மில் அருகே சென்டர் மீடியனில் மோதியதில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜான்சனை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து  மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாலை 6 மணிக்கு காட்டுப்புத்தூரில் பணி முடிந்து சென்றது தெரியவந்தது. மேலும் ஜான்சன், இதற்கு முன் ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்ததால் அங்கு சென்று சக போலீசாரை சந்தித்து பேசிய பின், வீடு திரும்பும் போது பைக்கில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மொபட் மோதி முதியவர் பலி:  மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பகுதியை சேர்ந்தவர் திருமலை (70). இவர் நேற்று  திருவெள்ளரை பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் நோக்கி சென்ற மொபட் ஒன்று திருமலை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் திருமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் ஓட்டிச் சென்ற பெருவளநல்லூரை சேர்ந்த கலையரசன் (30) என்பவரை கைது செய்தனர்.

துறையூர் அருகே மின் கசிவால் வீடு தீக்கிரை: துறையூர் அருகே மின்கசிவால் வீடு தீக்கிரையானது. வீட்டிலுள்ள அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.
 துறையூரை அருகே கோணப்பாதையை சேர்ந்தவர் நாகராஜன்(38), கூலிதொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென்று தீப்பிடித்து எரிந்து புகை வெளியே வந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து துறையூர் தீயணைக்கும் நிலைய அதிகாரி நாகராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பீரோ, டிவி மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தகவலறிந்த துறையூர் வருவாய் ஆய்வாளர் கவுரி சம்பவ இடத்தை வந்து நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு  உடனடியாக பயன்படுத்த வேட்டி, சேலைகள் வழங்கினார். விசாரணையில் விபத்திற்கான காரணம் மின்கசிவு என  தெரியவந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்